Wednesday, 31 December 2008

மற்றுமொரு புதிய ஆண்டு ...

மற்றுமொரு புதிய ஆண்டு ...

பல்வேறு எதிர்பார்புகளுடன் தொடங்க இருக்கிறது
பல புது மாற்றங்களையும், பழைய பிரச்சினைகளின் நீட்சிகளையும் கையாள்வதற்கு தயாராக... பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை ...

இஸ்ரேல்-பாலஸ்தீன்,இலங்கை தமிழர், ஈராக் பிரச்சினைகள்,உலகளாவிய பொருளாதார மந்தம், இந்திய -பாகிஸ்தான் பதற்ற நிலை போன்றவை இந்த ஆண்டில் எந்த பரிமாணத்திற்கு செல்கிறது என்பதை பார்க்கலாம், இந்தியாவில் அடுத்த பொது தேர்தல்,புது அமெரிக்க அரசாங்கம் ஆகியவை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீவிரவாதம் ??? என்ன செய்ய போகிறதோ ?

நல்லவை நடக்கும் என்று எதிர்பாத்து புதிய ஆங்கில புத்தாண்டை எதிர்கொள்வோம் ...

Tuesday, 30 December 2008

ஊருக்குப் போனேன் ...

பருவ மழையின் இறுதி சாரல்
மொய்க்கும் தட்டான்கள்
கர்ப்பம் தரித்த நஞ்சைகள்
பச்சையாய் சிரிக்கும் தரிசுகள்
வெண்முத்து தும்பை செடிகள்
பூசணி பூவுடன் மார்கழி கோலங்கள்
கார்த்திகை மார்கழியின் இளம் குளிர்
பல ஆண்டுகள் இதை தொடர்ந்து பார்த்து இருந்தாலும்
இந்த நாள்களில் இவை பெரு மகிழ்வை தருகின்றன
ஆனந்தம் என்பது இருக்கும் போது தெரிவதில்லை ....
இவை அனைத்தையும் இணையத்தின் வேகத்தில் தொலைத்து விட்டோம்-தவிர்க்க இயலாமல்...