பருவ மழையின் இறுதி சாரல்
மொய்க்கும் தட்டான்கள்
கர்ப்பம் தரித்த நஞ்சைகள்
பச்சையாய் சிரிக்கும் தரிசுகள்
வெண்முத்து தும்பை செடிகள்
பூசணி பூவுடன் மார்கழி கோலங்கள்
கார்த்திகை மார்கழியின் இளம் குளிர்
பல ஆண்டுகள் இதை தொடர்ந்து பார்த்து இருந்தாலும்
இந்த நாள்களில் இவை பெரு மகிழ்வை தருகின்றன
ஆனந்தம் என்பது இருக்கும் போது தெரிவதில்லை ....
இவை அனைத்தையும் இணையத்தின் வேகத்தில் தொலைத்து விட்டோம்-தவிர்க்க இயலாமல்...