
காந்தி பிறந்த மண்,அஹிம்சையின் அச்சாரம்
இன்று கயவர்கள் கலகமாடும் கலவர பூமி
உனக்கு இரத்த ருசி பிடித்து விட்டதோ
அடிக்கடி மனித இரதத்தை ருசிக்கிறாயே
உன்னுள் இப்படியும் ஒரு கொலை வெறியா !
பூஞ் கோத்ரா வரிசையில் இன்று அகமதாபாத்
இது மண்ணின் தன்மையா அல்லது உன்னிடமுள்ள
மனித மூடர்களின் தன்மையா
வேற்றுமையில் ஒற்றுமை மலையேறி விட்டதோ
இனி மேலும் இதை தொடர விடாதே
வன்முறையை வளர விடாதே
இனி மேலும் இரதம் சிந்த எங்களால் முடியாது
உன்னிடம் நாங்கள் மகாத்மாவை வேண்டவில்லை
மனிதனையும் மனிதத்தையும் வேண்டுகிறோம் கொடுப்பாயா ?
இந்துவையும் இசுலாமியனையும் ஒன்று சேர்த்து வைப்பாயா ?
இந்த இரத்த வெறிக்கு முற்றுப்புள்ளி வைப்பாயா ?
ஆவலுடன் ...